சுடச்சுட

  

  முதுகுளத்தூர் அருகே உள்ள இளங்காக்கூரில் இருந்து தேரிருவேலிக்கு போடப்பட்டிருந்த புதிய சாலையை ராமநாதபுரம் மாவட்ட எம்.பி.அன்வர்ராஜா,

  முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன் ஆகியோர் பார்வையிட்டனர்.

  முதுகுளத்தூர் அருகே உள்ள இளங்காக்கூர்- தேரிருவேலி இடையே 2740 மீட்டருக்கு புதிய சாலை போடப்பட்டிருந்தது. இந்த சாலையை தேசிய தரக்கட்டுப்பாட்டு அலுவலர்

  பிரகாஷ்சர்மா ஆய்வு செய்தார்.

     அவருடன் மாவட்ட எம்.பி அன்வர்ராஜா, எம்.எல்.ஏ. முருகன் ஆகியோரும் பார்வையிட்டனர்.

       ஆய்வின் போது ராமநாதபுரம் மாவட்ட நிர்வாக பொறியாளர் ராமசாமி, உதவி நிர்வாக பொறியாளர் அழகேசன், உதவி பொறியாளர் ஜம்பு ஆகியோர் மத்திய

  தரக்கட்டுப்பாட்டு குழு ஆய்வு செய்வதற்கு உதவி புரிந்தனர். சாலையை ஆய்வு செய்த அதிகாரி பிரகாஷ்சர்மா சாலைகள் போடப்பட்ட விதம், எப்போது வேலைப்பாடுகள்

  முடிவடைந்தன.

     இதற்கான தொகை ஒதுக்கீடு எவ்வளவு, சாலை அளவு போன்றவற்றை  அன்வர் ராஜா மற்றும் எம்.எல்.ஏ. முருகன் ஆகியோரிடம் விளக்கிக் கூறினார்.ஆய்வில்

  கூட்டுறவு சங்க துணைத் தலைவர் பரம்பொருள் காளிமுத்து, கவுன்சிலர்கள் தூரி. எம்.மாடசாமி, சரஸ்வதி செந்தில்குமார் ,கடம்பொடை ரவி, அண்ணா தொழிற்சங்க

  ஒன்றியச் செயலாளர் சேதுபதி ஆகியோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai