சுடச்சுட

  

  கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து: வேளாண் அதிகாரி

  By DN  |   Published on : 27th October 2014 04:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாடானை தாலுகாவிலுள்ள உர வியாபாரிகள் அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து செய்யபடும் என மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி எச்சரித்துள்ளார்.

   திருவாடானை தாலுகா தொண்டி,ஆர் எஸ் மங்கலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த உர வியாபாரிகள் அரசு நிர்ணயித்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும்.

  கூட்டுறவு சங்கங்களில் போதுமான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. உரங்களின் விலை பட்டியல் மூடை ஒன்றுக்கு: யூரியா (ஸ்பிக்) ரூ.270.50, டி.ஏ.பி. ரூ.1175,

  காம்ப்ளக்ஸ் (ஸ்பிக்) 20:20:20 ரூ.900, பொட்டாஷ் ரூ.800, அமோனியம் சல்பேட் ரூ.617, அமோனியம் குளோரைடு ரூ.700 என அரசு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

   தனியார் கடைகள் அரசு அறிவித்துள்ள விலையைவிட கூடுதலாக விற்பனை செய்தால் விவசாயிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள வேளாண் அலுவலகத்தையோ,

  அல்லது வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட கடைகள் பற்றி தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக வேளாண் அதிகாரிகள்

  நடவடிக்கை எடுத்து கடையின் உரிமம் ரத்து செய்யபடும் என ராமநாதபுரம் வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai