சுடச்சுட

  

  ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நள்ளிரவில் கடையை உடைத்து ரூ.30ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருள்களை கொள்ளையடித்த பிரபல கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளி தப்பி ஓடிவிட்டார்.

   கீழக்கரை வாணியர்தெருவில் உள்ள நகை கடையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கடைக்குள் சப்தம் கேட்டுள்ளது. இது குறித்து பக்கத்து கடைக்காரர் ராஜ்குமார் என்பவர்

  கடையின் பொறுப்பாளர் தட்டார்தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் முனீஸ்வரனுக்கு தகவல் தெரிவித்தார்.

  இதை தொடர்ந்து முனீஸ்வரன் அங்கு சென்று பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடைக்குள் வைக்கப்பட்டிருந்த 700கிராம் எடையுள்ள 12 வெள்ளி பொருட்கள்

  திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து முனீஸ்வரன் கீழக்கரை காவல்நிலையத்தில் செய்த புகாரின் பேரில், போலீஸார் விடிய விடிய சோதனை நடத்தினர்.

   அப்போது கீழக்கரை பேருந்து நிலையம் அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இவர்கள் கீழக்கரை

  பழைய ஜூம்மாபள்ளிவாசல் தெருவை சேர்ந்த அலியார் மகன் சதக்கத்துல்லா, சீனிமுஹம்மதுவின் மகன் முஹம்மது கான்(19) என்பதும், இவர்கள் தான் கடையில்

  கொள்ளையடித்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

  அவர்களிடமிருந்து 576கிராம் வெள்ளிப் பொருள்களை போலீஸார் கைப்பற்றினர்.

  இந்த கொள்ளையில் கீழக்கரையை சேர்ந்த கல்அமீன் என்பவர் முக்கிய பங்கு வகித்திருப்பதும் அவரிடம் மீதமுள்ள வெள்ளி பொருட்கள் இருப்பதும் தெரியவந்தது.

  கைது செய்யப்பட்ட இருவர் மீதும் பல கொள்ளை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. கீழக்கரை காவல் உதவி ஆய்வாளர் குமரேசன் வழக்குப்பதிவு செய்து

  இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். முக்கிய குற்றவாளியான கல்அமீனை போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai