சுடச்சுட

  

  பரமக்குடி போர்டிங் செல்லும் சாலையில் மூன்று சக்கர வாகனம் மோதி 7 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

   சிவகங்கை மாவட்டம் மிக்கேல்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் வசந்தகுமார். இவர் பரமக்குடி போர்டிங் சாலைப் பகுதியில் உள்ள மாமா வீட்டுக்கு

  தீபாவளி பண்டிகையை கொண்டாட வந்துள்ளார்.

    ஞாயிற்றுக்கிழமை போர்டிங்சாலைப் பகுதியில் சிலர் பட்டாசு வெடித்துள்ளனர். இதை வசந்தகுமார் சாலையோரம் ஒதுங்கி நின்றபடி பார்த்துள்ளார். அப்போது அவ்வழியாக

  வேந்தோணியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான காளிதாஸ் (26) ஓட்டிவந்த மூன்று சக்கர வாகனம் வசந்தகுமார் மீது மோதியது.

    இதில் பலத்த காயமுற்ற சிறுவனை பரமக்குடி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

     இதுகுறித்து பரமக்குடி நகர் காவல்நிலையத்தில் அவரது தந்தை முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து காளிதாûஸ கைது செய்து விசாரித்து

  வருகிறார்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai