சுடச்சுட

    

    கால்நடை ஆய்வாளர் பணிக்குபதிவு மூப்பு பரிந்துரை

    By ராமநாதபுரம்  |   Published on : 28th October 2014 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கால்நடை ஆய்வாளர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை செய்யப்பட இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செய்திக்குறிப்பு விவரம்: கல்வித் தகுதியாக மேல்நிலைக்கல்வி (பிளஸ் 2) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர் வயது 18 முதல் 35 வரை. பிற்பட்ட, மிகவும் பிற்பட்டவர் வயது 18 முதல் 32 வரை. பொதுப் போட்டியாளராக இருந்தால் வயது 18 முதல் 30 வரையும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு இல்லை.

    மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு உண்டு.

    உத்தேச பதிவு மூப்பு அடிப்படையில் முன்னுரிமையுள்ளர்வர்கள் (பதிவு மூப்பு தேதி அடைப்புக் குறிக்குள்)

    ஆதரவற்ற விதவைகள்: பழங்குடியினர் (அனைவரும்)ஆதி திராவிட அருந்ததியர் (29.8.2012) மிகவும் பிற்பட்ட வகுப்பினர் (14.3.2001) பிற்பட்டோர்- முஸ்லிம் (19.1.2009) பொதுப் போட்டியாளர்கள் (4.9.2000)

    மாற்றுத்திறனாளிகளில் பெண்கள் மட்டும்:

    தாழ்த்தப்பட்டோர் (25.5.1990), மிகவும் பிற்பட்டோர் (7.1.1991), பிற்பட்டோர்(28.12.2001) பொது- மாற்றுத்திறனாளிகள்: பழங்குடியினர் (25.6.1997) ஆதிதிராவிடர்- அருந்ததியர் (3.6.1992) மிகவும் பிற்ட்ட வகுப்பினர் (30.7.1990)பிற்பட்ட வகுப்பினர்- முஸ்லிம் (27.5.1991) பொதுப்பிரிவினர் (24.5.1990)

    முன்னுரிமையற்றவர்கள்- பொது:

    பழங்குடியினர் (28.6.1996) மிகவும் பிற்பட்டோர் (17.6.1998) பிற்பட்டோர்- முஸ்லிம்(20.7.1998) பிற்பட்டோர் (12.6.1998) பொதுப் போட்டியாளர் (30.5.1996)இத்தகுதிகளையுடையோர் கால்நடை ஆய்வாளர் பணிக்கு பரிந்துரைக்கப்பட இருப்பதால் தங்களது அனைத்து சான்றிதழ்களுடன் அக்டோபர் 29 ஆம் தேதி (புதன்கிழமை) மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து

    பரிந்துரை விவரத்தினை தெரிந்து கொள்ளுமாறும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai