Enable Javscript for better performance
கிணற்றுக்குள் தவறி விழுந்து இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கிணற்றுக்குள் தவறி விழுந்து இளைஞர் சாவு

    By ராமநாதபுரம்,  |   Published on : 28th October 2014 12:15 AM  |   அ+அ அ-   |    |  

    ராமநாதபுரம் பேருந்து நிலைய வாடகை சைக்கிள் நிறுத்தும் இடத்தில் குடித்து விட்டு போதையில் கிணற்று உரையின் மீது தூங்கிக் கொண்டிருந்தவர் தவறி கிணற்றுக்குள் விழுந்ததில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

    ராமநாதபுரம் பாரதிநகர் குருசாமி மகன் சீனிவாசன் (38). இவர் அக்டோபர் 18 ஆம் தேதி மது அருந்தி விட்டு குடி போதையில் புதிய பேருந்து நிலைய வாடகை சைக்கிள்கள் நிறுத்தும் இடத்தில் உள்ள கிணற்றின் மேல் உறையில் தூங்கிய போது தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டாராம்.

    அவர் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனளிக்காது ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

    சம்பவம் தொடர்பாக உறவினர் மீனாகுமாரி கொடுத்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai