சுடச்சுட

    

    செல்போன் கடை பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரம் பொருள்கள் திருட்டு

    By ராமநாதபுரம்  |   Published on : 28th October 2014 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் அருகே செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை திருடிச் சென்று விட்டதாக தேவிபட்டிணம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    ராமநாதபுரம் அருகே சித்தார்கோட்டை கிராமத்தில் வடக்குத் தெருவில் செல்போன் கடை நடத்தி வருபவர் முகம்மது பாரூக் மகன் அகமது மைதீன் (43).

    இவர் கடையை வழக்கம் போல சனிக்கிழமை இரவு பூட்டி விட்டு சென்று விட்டார்.

    ஞாயிற்றுக்கிழமை காலையில் கடையை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கு இருந்த ரொக்கம் ரூ. 2500 மற்றும் 8 செல்போன்கள் உள்பட மொத்தம் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் திருடிச் செல்லப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து தேவிபட்டிணம் போலீஸார் வழக்குப் பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai