Enable Javscript for better performance
தொண்டி பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம்- Dinamani

சுடச்சுட

    

    தொண்டி பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம்

    By திருவாடானை  |   Published on : 28th October 2014 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாடானை தாலுகா தொண்டி, நம்புதாளை போன்ற பகுதிகளில் தொடர் மழை காரணமாக மழை நீர் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தடுப்பு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவாடானை தாலுகா தொண்டி, நம்பதாளை கடற்கரை பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தொண்டி பேரூராட்சியும், நம்புதாளை ஊராட்சியும் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து தொண்டி மனித உரிமைக் கழகத் தலைவர் ராசு கூறுகையில், தற்போது இப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் குண்டும் குழியுமான பகுதிகளில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் மலேரியா, டெங்கு,சிக்கன்குனியா போன்ற நோய்கள் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து அடித்து நோய்களை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai