சுடச்சுட

  

  தேவர் ஜயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் வாகன நெரிசலைத் தவி ர்ப்பதற்கு புதிய மாற்று சாலை அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

  பசும்பொன்னில் தேவர் நினைவிடத்துக்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி முன் உள்ள தார்ச் சாலை வழியாகத் தான் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் கார்கள் செல்லும்.

  அதே சமயம் இதே சாலை வழியாகத் தான் மற்றவர்களின் வாகனங்களும் செல்ல வேண்டி உள்ளது. அப்போது வாகன நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்படும்.

  இந்த நெருக்கடியை இந்த ஆண்டு தவிர்ப்பதற்கு மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார், பள்ளியின் பின்புறம் மாற்று புதிய சாலை அமைக்க உத்தரவிட்டார்.

  இதையடுத்து ரூ.3 லட்சம் செலவில் புதிதாக மெட்டல் ரோடு போடும் பணி துவங்கி துரிதமாக நடைபெற்று வருகிறது.

  கமுதி ஊராட்சி ஒன்றியத் தலைவர் வழக்குரைஞர்

  த. பாலு மேற்பார்வையில் கூடுதல் ஆணையர் வீரராகவன்,

  ஒன்றிய பொறியாளர்கள் கணபதி செந்தில் குமார், துணை ஆணையர்கள் தங்கப்பாண்டியன்,

  ராஜேந்திரன், மங்களேஸ்வர், ஓவர்சீயர்கள் ரவிச்சந்திரன், சத்தியேந்திரன், ராஜகுமார், சாதிக் பாட்சா உள்ளிட்டோர் புதிய சாலை அமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai