சுடச்சுட

  

  பசும்பொன்னிற்கு தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அபய்குமார் சிங், திங்கள்கிழமை மாலை வந்தார்.

  பசும்பொன் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை 3 நாள் விழா முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் பார்வையிட்டார்.

  வெளி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் எந்தெந்தப் பகுதியில் பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

  பதற்றமான பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளுமாறும், வாகன கட்டுப் பாடுகளை அவசியம் கடைப்பிடிக்கச் செய்யுமாறும் அதிகாரிகளிடம் கூறினார்.

  ஐ.ஜி. யுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.என்.மயில்வாகனன், கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை, உதவிக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.சுந்தரவடிவேல், தனிப்பிரிவு ஆய்வாளர் வெள்ளையன் உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai