சுடச்சுட

  

  பசும்பொன் பகுதியில் தாற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பு

  By கமுதி,  |   Published on : 28th October 2014 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பசும்பொன் தேவர் ஜயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன் பகுதியில் இரு இடங்களில் தாற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

  பசும்பொன்னில் அக்.28 முதல் 3 நாள்கள் பசும்பொன் தேவர் ஜயந்தி விழா நடைபெறுகிறது. இதில் 29 ஆம் தேதி காலை முதல் தமிழ்நாடு முழுவதும் இருந்து அரசு பேருந்துளிலும், தனியார் பேருந்துகளிலும் வெளியூர்களில் இருந்து பல ஆயிரக்ணக்கானோர் வருவர். பேருந்துகள் அனைத்தும் பசும்பொன்னுக்குள் வந்து செல்வது கடினமாக இருக்கும். எனவே மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார், பசும்பொன்னுக்கு வெளியே அபிராமம் சாலை ஓரமாக இரு இடங்களில் தாற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்க உத்தரவிட்டுள்ளார். கமுதி உபமின் நிலையத்தை அடுத்து சாலைக்கு தென்புறமாக ஒரு நிலையமும், பசும்பொன் கிராமத்துக்குச் செல்லும் சாலை முகப்பு அலங்கார வளைவு அருகில் மற்றொரு நிலையமும் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  சிவகங்கை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மரிய எல்ஸி மேற்பார்வையில் கமுதி பேரூராட்சி செயல் அலுவலர் ஏ. தனபால், தலைமை எழுத்தர் அ. செல்வராஜ், விஸ்வநாதன், அழகர்சாமி, அழகேசன், சுரேஷ், சுகாதார மேற்பார்வையாளர் சுப்பையா மற்றும் அபிராமம் பேரூராட்சி அலுவலகத்தினர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  கமுதி பகுதி வழியாக வரும் பேருந்துகள் அனைத்தும் உபமின் நிலையம் அருகே உள்ள தாற்காலிக பேருந்து நிலையத்திலும், அபிராமம் பகுதியில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தையும் அலங்கார வளைவு அருகே உள்ள தாற்காலிக பேருந்து நிலையத்திலும் நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai