சுடச்சுட

  

  திருவாடானை தாலுகா ஓரிக்கோட்டை கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிர் திட்டம் குறித்து தொழில் நுட்ப பயிற்சி முகாம் நடைபெற்றது.

  திருவாடானை தாலுகா ஓரிக்கோட்டை கிராமத்தில் வேளாண்மை துறை சார்பாக தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத் திட்டத்தின் கீழ் பயிர் திட்டம் அடிப்படையிலான தொழில் நுட்ப பயிற்சி முகாம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும், ஊராட்சி மன்றத் தலைவர் சீலி முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் விவசாயிகள் குழுக்கள் உருவாக்குதல், மண் பரிசோதனை, விதை ரகத் தேர்வு, விதை நேர்த்தி, அடியுரம் மற்றும் விதைப்புப் பணி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத் திட்ட ஆலோசகர் ஸ்ரீவாணி மற்றும் உச்சுப்புளி வட்டார தொழில் நுட்ப மேலாளர் பானுமதி ஆகியோர் கலந்து கொண்டு நல் விதை தேர்வு, விதை கடினப்படுத்துதல், விதை நேர்த்தி செய்வது குறித்து பேசினர்.

  இதில் திருவாடானை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் நாகராஜ், துணை வேளாண்மை அலுவலர் பாண்டியன், உதவி வேளாண்மை அலுவர் சுப்பிரமணி, ராதாகிருஷ்ணன், வட்டார தொழில் நுட்ப மேலாளர் சூர்யா, தொழில் நுட்ப வல்லுநர்கள் ராஜேஸ்வரி, இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஏராளாமன விவசாயிகள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai