சுடச்சுட

    

    மருதுபாண்டியர் நினைவு தினம்: சிலைக்கு தேமுதிக வினர் மாலை

    By ராமேசுவரம்  |   Published on : 28th October 2014 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மருதுபாண்டியர் நினைவு நாளையொட்டி ராமேசுவரத்தில் அவர்களது சிலைக்கு தே.மு.தி.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் மாலை அணிவித்தனர்.

    ராமேசுவரத்தில் மருதுபாண்டியரின் 213 ஆவது நினைவு தினம் தே.மு.தி,க. சார்பில் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு தே.மு.தி.க. ராமேசுவரம் நகர் செயலர் முத்துக்காமாட்சி தலைமை வகித்தார்.

    அதனைத் தொடர்ந்து கட்சியின் மாவட்டப் பொருளாளர் திலிப்காந்த், வீரபத்திரசுவாமி கோயில் தெருப் பகுதியில் அமைந்துள்ள மருதுபாண்டியரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கட்சியின் ராமேசுவரம் நகர் தலைவர் தெட்சிணாமூர்த்தி, நிர்வாகிகள் துர்கா நாகேந்திரன், சீனிவாச அய்யர், கண்ணன் உள்பட ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai