சுடச்சுட

  

  மீன்பிடிக்க அனுமதிக்கக் கூடாது: நாட்டுப்படகு மீனவர்கள் கோரிக்கை

  By ராமநாதபுரம்,  |   Published on : 28th October 2014 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமேசுவரத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் விசைப் படகுகளை தொண்டிக்கு இடம் மாற்றி மீன் பிடிக்க அனுமதிக்கக் கூடாது என தொண்டி பகுதி நாட்டுப் படகு மீனவர்கள் சங்க நிர்வாகிகள் திங்கள்கிழமை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் க. நந்தகுமாரை சந்தித்து நாட்டுப்படகு மீனவர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மீனவர் பேரவை மாவட்டத் தலைவர் எம். சீனிராஜன், இளைஞரணி மாவட்டத் தலைவர் சிங்காரச் செல்வன் ஆகியோர் கொடுத்துள்ள கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:

  ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தீவுப் பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. திருவாடானை தாலுகா தொண்டி பகுதியில் 50 விசைப் படகுகளும், சுமார் 1000க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் உள்ளன. தற்சமயம் ராமேசுவரத்தில் உள்ள விசைப் படகுகளை மீன் வளத்துறை தொண்டி பகுதி கடலில் மீன்பிடிக்க இடம் மாற்றம் செய்வதாக அறிகிறோம்.

  அவ்வாறு இடமாற்றம் செய்வதால் அதிகமான விசைப்படகுகள் நாட்டுப் படகுகளோடு மோதி விபத்துக்கள் ஏற்பட்டு படகுகள் சேதமாவதுடன் உயிரிழப்புகளும் ஏற்படும். தற்போது தொண்டி பகுதியில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் மற்றும் விசைப் படகு மீனவர்களின் ஒற்றுமை கெட்டு விடும். அதிகமான விசைப் படகுகள் கடலில் மீன் பிடிக்கும் போது நாட்டுப் படகு மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி விடலாம். இதனால் நாட்டுப் படகு மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கும்.

  விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதிகளில் துர்நாற்றம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே நாட்டுப் படகு மீனவர்கள், அதனை நம்பி சிறுதொழில் செய்பவர்கள் என பலருக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே ராமேசுவரம் விசைப் படகுகளை

  இட மாற்றம் செய்யும் எண்ணத்தை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai