Enable Javscript for better performance
3 மாதங்களாக உதவித் தொகை வரவில்லை: ஆட்சியரிடம் பெண்கள் புகார்- Dinamani

சுடச்சுட

    

    3 மாதங்களாக உதவித் தொகை வரவில்லை: ஆட்சியரிடம் பெண்கள் புகார்

    By ராமநாதபுரம்  |   Published on : 28th October 2014 12:16 AM  |   அ+அ அ-   |    |  

    கடந்த 3 மாதங்களாக விதவை பெண்களுக்கான உதவித் தொகை வராததால் நடவடிக்கை எடுக்கும் படி நம்புதாளை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் 20 பேர் திங்கள்கிழமை ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா நம்புதாளை கிராமத்தைசத் சேர்ந்த வள்ளிமயில், பூரணவள்ளி உள்ளிட்ட 20 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் க. நந்தகுமாரை நேரில் சந்தித்து கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது..

    கடந்த 3 மாதங்களாக விதவைகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை வரவில்லை. நாங்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறோம்.

    அரசு வழங்கிய உதவித் தொகை மிகுந்த உதவியாக இருந்தது.

    திருவாடானை தாலுகா நம்புதாளை கிராமத்தைச் சேர்ந்த எங்களுக்கு தொடர்ந்து மாதாந்திர உதவித் தொகையை வழங்கிட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

    முதியோர் உதவித்தொகை வரவில்லையென புகார்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா காக்குடி கிராமத்தைச் சேர்ந்த பிச்சை மகன் ஏழுமலை உள்ளிட்ட 19 பேர் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரை சந்தித்து கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் தங்களுக்கு கடந்த 2 மாதங்களாக முதியார்களுக்காக அரசு வழங்கும் மாதாந்திர உதவித் தொகை வரவில்லை என்றும் தொடர்ந்து தங்களுக்கு வழங்கிட மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் செய்ய வந்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai