சுடச்சுட

  

  கமுதியில் பாதுகாப்பு பணிக்கு வரும் போலீஸ் அதிகாரிகள் தங்க புதிய கட்டடம் திறப்பு

  By DN  |   Published on : 29th October 2014 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கமுதிக்கு பாதுகாப்பு பணிக்கு வரும் காவல்துறை அதிகாரிகள் தங்குவதற்கு ரூ.4.5 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடம்  திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

     கமுதி அருகே பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்.30-ஆம் தேதி நடத்தப்படுகிறது. இந்த விழா 3 நாள்கள் நடைபெறும்

  என்பதால் பந்தோபஸ்து பணிக்கு காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஆயிரகணக்கானோர் வரவழைக்கப்படுகின்றனர். இவர்கள் கமுதி பகுதி அரசு மற்றும்

  தனியார் பள்ளிகளில் சுமார் 4 நாள்கள் வரையிலும் தங்க வைக்கப்படுகின்றனர்.

    இதையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.  இதை தவிர்க்கும் பொருட்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலா ரூ.4.5 கோடி செலவில் தங்கும் வசதிகள்

  மற்றும் சாப்பிடும் இடத்துடன் கூடிய நவீன 2 மாடிக் கட்டங்கள் இரண்டு கட்டுவதற்கு உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு இரண்டு கட்டடங்கள் கட்டும் பணி

  துவங்கியது. தற்போது இதில் காவல் துறை உயர் அதிகாரிகளுக்குரிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து இந்த ஆண்டு தேவர் விழா பந்தோபஸ்து பணிக்கு வந்துள்ள ராமநாதபுரம் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள், கூடுதல்

  கண்காணிப்பாளர்கள் உதவி காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் நிலையில் உள்ளவர்கள் சுமார் 250 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.   இந்த கட்டத்துக்குள்ளேயே

  சாப்பிடுமிடமும் உள்ளது. தங்குமிட பெரிய அறைகளில், குளிர் சாதன கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.   இன்னும் ஓரிரு மாதங்களில் அடுத்த கட்டடமும் கட்டி

  முடிக்கப்பட்டு விடும் என்றும், அந்த கட்டடத்தில் காவல் சார்பு ஆய்வாளர்கள், தலைமைக்காவலர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் தங்க வைக்கப்படுவர் என்றும் அதிகாரிகள்

  தரப்பில் கூறப்படுகிறது.  வருங்காலத்தில் கமுதி பகுதிக்கு பந்தோபஸ்து பணிக்கு வரும் காவல் துறையினர், பள்ளிகளில் தங்க வைக்கும் அவசியம் இல்லை எனவும்

  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai