சுடச்சுட

    

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மையத்தால், நவம்பர் முதல் தேதி முதல் துவங்கவுள்ளதாக அதன் மாவட்ட செயலர் சா.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

     இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ராமநாதபுரம் மாவட்ட மையத்தின் சார்பில் அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

    நடத்தப்படவுள்ளது. நவம்பர் மாதம் முதல் தேதி முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள்

    நடத்தப்படவுள்ளது. இதுவரை நடத்திய இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு 26 பேர் வெற்றி பெற்று பணிக்கு சென்றுள்ளனர். பயிற்சியில் சேர விரும்புவோர்

    தங்களது இரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

             முன்பதிவு செய்து கொள்ள விரும்புவோர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தோழர்.எம்.ஆர்.அப்பன் இல்லம், 68, ரயில்வே குட்செட் தெரு, அண்ணாநகர்,

    ராமநாதபுரம். அலைபேசி எண்கள்:9442044111 அல்லது 9942079225 என்ற எண்களிலும் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai