சுடச்சுட

    

    "தனுஷ்கோடி நெடுஞ்சாலை பணிகள் விரைவில் துவங்க திட்டம்'

    By DN  |   Published on : 29th October 2014 01:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம்-தனுஷ்கோடி நெடுஞ்சாலைப் பணிகள் விரைவில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது என கோட்டப்பொறியாளர் பாலகுமார் தெரிவித்துள்ளார்.

     பாம்பன் சாலைப் பாலத்தில் ரூ.18.58கோடி மதிப்பில் சீரமைப்பு பணிகள் துவங்கின. பாலத்துக்காக கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள  தூண்களில் ஏற்பட்ட விரிசல்களை

    சீரமைத்தல்,  பாலத்தில் வாகனங்கள் செல்லும் போது அதிர்வுகள் ஏற்படாமல் இருக்க பொறுத்தப்பட்ட ஸ்பிரிங்குகளை அகற்றப்பட்டு புதிதாக அமைத்தல், தடுப்புச் சுவர்கள்

    சீரமைத்தல், நவீன விளக்குகள் பொருத்துதல் உப்புக் காற்றால் பாலம் சேதமடையாமல் இருக்க ரசாயன கலவை அடங்கிய வர்ணம் பூசும் பணிகள் உள்பட அனைத்து

    பணிகளும்  முடிவடைந்தன. பணிகள் முடிவடைந்த நிலையில்  பாலத்தின் நடுப்பகுதியில் விரிசல்கள் காணப்பட்டன. அதனைத் தொடர்ந்து  திங்கள்கிழமை முதல் மீண்டும்

    சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.  சீரமைப்பு பணிகளை  தேசிய நெடுஞ்சாலைதுறை கோட்டப் பொறியாளர் பாலகுமார் செவ்வாய்க்கிழமை  ஆய்வு

    செய்தார். ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் கண்ணதாசன், ராமநாதபுரம் உதவிக்கோட்ட பொறியாளர் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

     ஆய்வின் போது கோட்டப் பொறியாளர் பாலகுமார் தெரிவித்தது:

         ராமநாதபுரம் முதல் முகுந்தராயர் சத்திரம் வரை தேசிய நெடுஞ்சாலையில்  சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க மத்திய அரசு ரூ.90 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

    அதற்கான முதற்கட்ட பணியாக   நெடுஞ்சாலைதுறை பொறியாளர்கள் பல மாதங்களாக சாலைகளின் வளைவுகள் குறித்தும், வாகனம் செல்லும்போது சாலைகளில்

    ஏற்படும் அதிர்வுகள் குறித்தும் ஆய்வு செய்து வந்தனர்.

     7 மீட்டர் அகலத்தில் உள்ள சாலையை  கூடுதலாக 3 மீட்டர் அகலப்படுத்தி, 10 மீட்டர் அகலச் சாலையாக அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

     அதற்காக மணல் பரிசோதனை உள்பட அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. மேலும் சாலையில் தார் மற்றும் ஜல்லிகள் கலந்த ரசாயன கலவை மேவும் பணிகள்

    விரைவில் துவங்கப்படவுள்ளன. தற்போது  ராமேசுவரம் முகுந்தராயர் சத்திரம் பகுதியிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில்  உள்ள தனுஷ்கோடி கம்பிப்பாடு பகுதி வரை

    சாலை அமைக்க அரசு ஒப்புதல் வழங்கி பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அதற்கு மேல் உள்ள  பகுதிக்கு இரண்டாம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டவுடன் சாலைகள் அமைக்கப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai