சுடச்சுட

  

  பரமக்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

     இக்கூட்டத்துக்கு மேற்கு மாவட்ட நிர்வாகக்குழு தலைவர் பஷீர்அலி தலைமை வகித்தார். நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வாவாராவுத்தர், சலிமான் ஆகியோர் முன்னிலை

  வகித்தனர்.

     இதில் தமுமுக பரமக்குடி நகர் தலைவர் வி.முகம்மதுஅப்பாஸ், செயலாளர் எஸ். சேக்அப்துல்லா, பொருளாளர் எஸ். தாஜ்முகம்மது மற்றும் மனித நேய மக்கள் கட்சி

  செயலாளர் எம். இபுராஹிம்ஷா ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

   தெற்கு பள்ளிவாசல் இணைச் செயலாளர் அப்துல்ரஹீம் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai