சுடச்சுட

  

  பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்சென்ற வேன் மீது தனியார் பேருந்து மோதல்

  By DN  |   Published on : 29th October 2014 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமக்குடி அருகே செவ்வாய்க்கிழமை பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்சென்ற வேன் மீது தனியார் பேருந்து மோதியதில் குழந்தைகள் காயமின்றி உயிர் தப்பினர்.

   பரமக்குடி மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் 12 குழந்தைகளை மேலாய்க்குடி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியிலிருந்து செந்தில்குமார்(33) என்பவர் ஆம்னி வேனில் ஏற்றி

  வந்துள்ளார். சத்தியமூர்த்தி காலனி பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, எதிரே பரமக்குடியிலிருந்து முதுகுளத்தூர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, குழந்தைகள் சென்ற

  வேன் மீது மோதியது. இதில் வேன் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மரத்தின் மோதியது.

   இந்த விபத்தில் குழந்தைகளுக்கு உள் காயங்களும், வேன் ஓட்டுநர் செந்தில்குமாருக்கு தலையிலும் காயம் ஏற்பட்டது. பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு

  செல்லப்பட்ட செந்தில்குமார் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்து குறித்து எமனேசுவரம் போலீஸார் வழக்குப்

  பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai