சுடச்சுட

  

  பாம்பன் பாலத்தில் ரயில் சென்றபோது ரயிலிலிருந்து தவறி கடலில் விழுந்தவர் உயிரிழந்தார்.

  ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரயில் செவ்வாய்க்கிழமை காலை 11.50 மணிக்கு ராமேசுவரத்திலிருந்து புறப்பட்டது. பாம்பன் பாலத்தில் ரயில் சென்றபோது,ரயிலில் பயணம் செய்த 55 வயது மதிக்கத்தக்கவர் கடலில் தவறி விழுந்துள்ளார்.

  இதைக்கண்டு அப்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் அவரை காப்பாற்ற முயன்றபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

  இதையடுத்து அவரது சடலத்தை கரைக்கு கொண்டுவந்தனர்.

  இதுகுறித்த தகவலின்பேரில் பாம்பன் போலீஸார் வழக்குப்பதிவு  செய்து விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai