சுடச்சுட

    

    ராமநாதபுரத்தில் 3 நாள்களுக்கு மதுபானக்கடைகள் அடைப்பு

    By DN  |   Published on : 29th October 2014 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை(அக்.28) முதல் அக்.30 ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாள்களுக்கு மதுபானக்கடைகளையும், மதுபானக் கூடங்களையும் அடைக்குமாறு ஆட்சியர் க.நந்தகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

     இது தொடர்பான செய்திக்குறிப்பு:

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் இம்மாதம் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி முடிய 3 நாள்கள் தேவர் திருமகனாரின் 107ஆவது பிறந்த நாள் விழா

    மற்றும் 52ஆவது குருபூஜை விழா நடைபெறவுள்ளது. விழாவினை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு மதுபானக்கடைகளையும், மதுபானக்

    கூடங்களையும் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

               ராமேசுவரம் மற்றும் திருவாடானை வட்டாரத்தில் உள்ள மதுபானகடைகள் தவிர பிற வட்டாரத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகளும் இம்மாதம் 28 ஆம்

    தேதி செவ்வாய்க்கிழமை மூடப்பட வேண்டும். புதன்கிழமை(அக்.29) மற்றும்  வியாழக்கிழமை(அக்.30) வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து

    மதுபானக்கடைகளும் மதுபானக் கூடங்களும் மூடப்பட வேண்டும்.

      ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் உரிமம் பெற்ற மதுபானக் கடைகளும் 3 தினங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும் எனவும் ஆட்சியரின் செய்திக்குறிப்பில்

    தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai