சுடச்சுட

  

  ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வைகை அணையில் தண்ணீர் திறக்க கோரிக்கை

  By DN  |   Published on : 29th October 2014 01:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க  வேண்டும் என பரமக்குடி நுகர்வோர் உரிமை பாதுகாப்புக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

   பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியில் நுகர்வோர் உரிமை பாதுகாப்புக் கழகம் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்துக்கு அதன் தலைவர்

  ரெத்தினவேல் தலைமை வகித்தார்.

    செயலர் முகம்மது சபீக் வரவேற்று, செயல் அறிக்கையினை தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கையினை பொருளாளர் ராமசாமி சமர்ப்பித்தார்.

   சங்க நிர்வாகிகள் ந.சேகரன், மு.புரோஸ்கான், வெங்கடேஸ், ராஜகோபால் ஆகியோர் தீர்மானங்களை வலியுறுத்திப் பேசினர்.

    பரமக்குடி நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் வைகை ஆற்றின் கரையோரங்களில் தனியார் ஆழ்துளை அமைத்து அதிக அளவில் தண்ணீர் எடுத்து விற்பனை செய்து

  வருவதை தடுக்க வேண்டும்.

   வைகை ஆற்றில் கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீர் திறந்து விடாததாலும், ஆற்றில் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெறுவதாலும், நிலத்தடி நீர்மட்டம் 400 அடிக்கும் கீழ்

  சென்று விட்டது.

    இதனால் வீடுகளில் போடப்பட்டிருந்த ஆழ்துளைகளில் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதை தடுக்கும் வகையில், போர்க்கால

  அடிப்படையில் வைகை அணையில் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உரிய பங்கீட்டு தண்ணீரை திறந்துவிட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன

  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க துணைத் தலைவர் ஏ.ராமமூர்த்தி நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai