சுடச்சுட

  

  தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எம்.ராஜாராம் செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டுள்ளார்.

   இதுகுறித்த செய்திக்குறிப்பு:

  நடப்பு ஆண்டில் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தினை செயல்படுத்திட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் நெல் மற்றும் அனைத்து விதமான

  உணவுப்பயிர்கள், சிறு தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் வருடாந்திர வணிக தோட்டக்கலை பயிர்கள் காப்பீடு செய்யப்படும். வெள்ளம், வறட்சி,

  பூச்சிகள் மற்றும் நோய்கள் போன்ற இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் மகசூல் இழப்புகளுக்கு இத்திட்டம் காப்பீடு வழங்குகிறது.

   குத்தகைதாரர்கள் உள்பட அனைத்து விவசாயிகளும் (கடன் பெறுவோர் மற்றும் பெறாதோர்) இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். வங்கிக்கடன் பெறும் விவசாயிகள்

  இத்திட்டத்தில் சேருவது கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது.   

      ஒவ்வொரு வட்டாரத்திலும் மாநில அரசின் விவசாயத் துறையினரால் பயிர் அறுவடைக் காலத்தில் சோதனைகள் நடத்தப்பட்டு நடப்பு பருவத்தின் சராசரி மகசூலை 3

  அல்லது 5 ஆண்டு உத்தரவாத மகசூலோடு ஒப்பிடப்படும்.

   நடப்பு பருவத்தின் மகசூல் எவ்வளவு குறைந்திருக்கிறதோ அந்த விகிதப்படி அவ்வட்டாரத்திலுள்ள காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் அவரவர் காப்பீடு செய்த

  தொகைக்கு ஏற்ப நஷ்ட ஈடு வழங்கப்படும். பிரிமியத் தொகையில் கடன் பெறாத சிறு, குறு விவசாயிகளுக்கு 55 சதமும், இதர விவசாயிகளுக்கு 50 சதமும் மானியமாக

  வழங்கப்படும்.

        மானியத்தொகை போக நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு சிறு, குறு விவசாயிகள் ரூ.115ம் இதர விவசாயிகள் ரூ.128ம் பிரிமியமாக செலுத்த வேண்டும். இதற்கான

  காப்பீட்டுத்தொகை ரூ.12800. பிரிமியம் செலுத்த வேண்டிய கடைசி நாள் கடன் பெறும் விவசாயிகளாக இருந்தால் 30.11.2014. கடன் பெறா விவசாயிகளாக இருந்தால் 15.11.2014.

  கடன் பெறும் விவசாயிகளை பொறுத்த மட்டிலும் அனைவருக்கும் 50 சத பிரிமியம் மட்டும் மானியமாக வழங்கப்படுகிறது.

  எனவே கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் ஏக்கருக்கு ரூ.128 செலுத்தி நெல்பயிரை காப்பீடு செய்து கொள்ளலாம். காப்பீடு செய்வதற்கான பிரிமியத் தொகையினை

  தங்கள் பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், மற்றும் தேசிய வங்கிகளில் செலுத்தலாம். மேலும் கூடுதல் தகவல்கள் மற்றும் விண்ணப்பங்களை

  பெற அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அவரது செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai