சுடச்சுட

    

    ஆரம்ப சுகாதார நிலையத்தில் 10 நாள்களாக மின் தடை: நோயாளிகள் அவதி

    By திருவாடானை,  |   Published on : 30th October 2014 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாடானை தாலுகா திருவெற்றியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 10 நாள்களாக மின் தடை செய்யப்பட்டுள்ளதால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர்.

    திருவாடானை தாலுகா திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் கோயில் உள்ளது.

    இங்கு ஒவ்வொரு வாரமும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் வெளி மாவட்டங்களில் இருந்து சுமார் 5 ஆயிரம் பேர் வந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு இரவு தங்குவது வழக்கம். இந்த ஊர் அருகே சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

    இங்கு வாழம் மக்களின் மருத்துவ வசதிக்கென ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 10 நாள்களாக மின் தடை செய்யப்பட்டுள்ளதால் நோயாளிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai