சுடச்சுட

  

  ஆயுள் காப்பீட்டுக் கழகம் ராமநாதபுரம் கிளை சார்பில் ரோசரி மன்றத்தில் ஆம் ஆத்மி பீமா யோஜனா என்ற சமுதாய பாதுகாப்புத் திட்ட உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

  விழாவுக்கு எல்.ஐ.சி. யின் முதுநிலைக் கோட்ட மேலாளர் எம். கோவிந்தராஜ் தலைமை வகித்தார். வணிக மேலாளர் எல். செந்தூர்நாதன், ராமநாதபுரம் கிளை மேலாளர் சி. ஜீவதயாள ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எல்.ஐ.சி. குழுக் காப்பீட்டுத் திட்ட மேலாளர் ஏ. சங்கர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.விழாவில் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் கலந்து கொண்டு 17,062 மாணவ, மாணவியருக்கு ரூ.1.07 கோடி மதிப்பிலான உதவித் தொகையினை வழங்கினார். அப்போது எல்.ஐ.சி.யின் சமுதாய பாதுகாப்பு முயற்சிகளையும் ஆட்சியர் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் எல்.ஐ.சி. மதுரை கோட்ட குழுக் காப்பீட்டுத் துறை மகத்தான முறையில் இத்திட்டத்தை செயல்படுத்தி 1,50,000க்கும் மேலான புதிய உறுப்பினர்களை இணைத்து இந்த ஆண்டு சாதனை படைத்திருப்பதாகவும், மதுரைக் கோட்ட வணிக மேலாளர் எல். செந்தூர்நாதன் பேசும் போது தெரிவித்தார். நிறைவாக எல்.ஐ.சி. நிர்வாக அலுவலர் எம். பாலமுரளி நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai