சுடச்சுட

    

    இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை வீரர்களுக்கு மண்டபம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

    ராமேசுவரம், தனுஷ்கோடி, கச்சத்தீவு கடல் பகுதியில் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோரக் காவல்படை வீரர்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் வீரர்களுக்கு பாதுகாப்பு குறித்து மன்னார் வளைகுடா கடல் பகுதியான மண்டபம், ôம்பன் கடல் பகுதியில் தீவிரவாதிகளை தடுப்பது குறித்தும், கடல் வழியாக கடத்தல் பொருள்களை கொண்டு செல்லும் படகுகளை பிடிப்பது குறித்தும், மீன்பிடிக்கச் சென்று கடலில் ஏற்படும் விபத்தில் சிக்கும் மீனவர்களை மீட்பது குறித்தும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சிக்கு மணலிலும், தண்ணீரிலும் விரைந்து செல்லும் அமைப்பில் உள்ள ஹோவர் கிராப்ட் கப்பல் மற்றும் மீன்பிடி படகுகள், கடலில் கண்காணிக்கும் முறைகள் குறித்து அளிக்கப்பட்ட பயிற்சியில் ஹெலிக்காப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai