சுடச்சுட

    

    குண்டும் குழியுமான தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்படுமா?

    By திருவாடானை  |   Published on : 30th October 2014 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாடனை தாலுகா சி.கே. மங்கலத்தில் திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை கடந்த சில நாள்களுக்கு முன் பெய்த மழையால் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    திருவாடானை தாலுகா சி.கே. மங்கலத்தில் திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

    தற்போது கடந்த சில நாள்களுக்கு முன் பெய்த மழையால் சி.கே. மங்கலத்தில் இருந்து ஆர்.எஸ். மங்கலம் செல்லும் சாலை வரை ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலை துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து திருவாடானையைச் சேர்ந்த அனல் ஆனந்த் கூறுகையில், திருச்சி- ராமேசுவரம் சாலையில் கடந்த சில நாள்களுக்கு முன் பெய்த மழையால் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டு மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்கள் விபத்துகுள்ளாகி வருகின்றனர். தற்போது நான்கு சக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சூழ்நிலையில் பள்ளம் பெரிதாகி கொண்டே செல்கிறது. எனவே சம்பந்தபட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai