சுடச்சுட

  

  கமுதிக்கு தமிழக காவல் துறை கூடுதல் இயக்குநர்(ஏடிஜிபி) ராஜேந்திரன், செவ்வாய்க்கிழமை மாலையில் வருகை தந்து தேவர் விழா பந்தோபஸ்து பணிகள் ஏற்பாடு குறித்து நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

  அவருடன் தென் மண்டல ஐ.ஜி. அபய்குமார் சிங், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.(பொறுப்பு) ஆனந்தகுமார் சோமானி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.என்.மயில்வாகணன் உள்ளிட்டோரும் வந்திருந்தனர். தேவர் நினைவிட வளாகம் முழுவதும் ஏடிஜிபி சுற்றிப்பார்த்து விட்டு, பந்தோபஸ்து குறித்து கேட்டறிந்தார். நினைவிடத்துக்கு வந்து செல்வோரை, உட்காரவோ, நிற்கவோ செய்ய விடாமல், நடந்து கொண்டே இருக்கச் செய்ய வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். தேவர் வசித்த பழைய வீட்டிற்குள் ஏடிஜிபி செ ன்று சுற்றிப்பார்த்தார்.

  அவரை தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் மற்றும் நிர்வாகத்தினர் வரவேற்றனர். அக்.30 முடிய 3 நாள்கள் முகாமிட்டு தேவர் விழாவிற்குரிய அனைத்து பந்தோபஸ்து பணிகளும் குறைவின்றி நிறைவேற அதிகக்கவனம் செலுத்த இருப்பதாக ஏடிஜிபி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai