சுடச்சுட

  

  ராமேசுவரம் கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமி முருகன் 4 ரத வீதீயில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

  ராமேசுவரம் கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது இதையொட்டி சுவாமி முருகன், வள்ளி, தெய்வானை மரக் கேடயத்தில் ராமநாதசுவாமி திருக்கோயிலிருந்து புதன்கிழமை மாலை 5 மணிக்கு புறப்பாடகி 4 ரத வீதிகளில் வலம் வந்து சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும் பகுதியான மேலவாசல் விவேகானந்தர் மடம் முன் வந்து சேர்ந்தார்.

  அதனைத் தொடர்ந்து சூரன், சுவாமி முருகனை 3 முறை வலம் வந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமி முருகன் வேலை கொண்டு சூரனை வதம் செய்து தலையை துண்டித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனை வழிபாடுகளும் நடைபெற்றன. பிறகு அப்பகுதியிலிருந்து சுவாமி முருகன், வள்ளி, தெய்வானை அலங்கரிக்கப்பட்டு மயில் வாகனத்தில் இரவு புறப்பாடகி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் திருக்கோயிலுக்கு சென்றடைந்தார். மேலும் சுவாமி முருகனின் திருக்கல்யாணம் வியாழக்கிழமை ராமநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் செல்வராஜ், ஆலய பேஷ்கார்கள் ராதா, அண்ணாதுரை உள்பட கோயில் ஊழியர்களும், ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai