சுடச்சுட

  

  ராமேசுவரம் திருக்கோயிலில் உண்டியல் எண்ணிக்கை: பக்தர்கள் ரூ.45 லட்சம் காணிக்கை

  By ராமேசுவரம்  |   Published on : 30th October 2014 12:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமேசுவரம் திருக்கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி கோயில் வளாகத்தில் நடைபெற்றது. அப்போது உண்டியலில் தங்கம், வெள்ளி பொருள்கள் மற்றும் வெளிநாட்டு பணம் ரூ. 45 லட்சம் கிடைத்திருந்தது.

  ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை பணத்தை கோயில் நிர்வாகம் சார்பில் மாதந்தோறும் எண்ணப்படும். இதையடுத்து அக்டோபர் மாதத்துக்கான உண்டியல் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கோயிலின் இணை ஆணையர் செல்வராஜ், இருக்கன்குடி கோயில் உதவி ஆணையர் தனபாலன், ராமநாதபுரம் மாவட்ட அறநிலையத்துறை ஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

  அப்போது உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக வெளிநாட்டுப் பணம் உள்பட ரூ. 45 லட்சத்து 74 ஆயிரத்து 903 ரூபாயும், 25 கிராம் தங்கமும், 4 கிலோ 170 கிராம் வெள்ளியும் கிடைத்திருந்தது. உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோயிலின் மேலாளர் லெட்சுமி மாலா, கண்காணிப்பாளர் ராஜாங்கம், ககாரின்ராஜ், முதுநிலை கணக்கீட்டாளர் சண்முகநாதன், பேஸ்கார் ராதா, அண்ணாத்துரை, இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கமலநாதன், அலுவலர்கள் மாரியப்பன், செல்லம் , துரை, குமரேசன், பழனிமுருகன், கணேசமூர்த்தி மற்றும் பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் இந்தியன் வங்கி ஊழியர்கள் மற்றும் கோயில் அலுவலர்களும், பணியாளர்களும் ஈடுபட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai