சுடச்சுட

    

    652 கணினி ஆசிரியர் பணிக்கு பதிவு மூப்பு பரிந்துரை: ஆட்சியர்

    By ராமநாதபுரம்  |   Published on : 30th October 2014 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 652 கணினி ஆசிரியர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை செய்யப்பட இருப்பதாக ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

    சென்னை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 652 கணினி ஆசிரியர் பணிக் காலியிடங்களுக்கு மாநில அளவிலான பதிவு மூப்பு பட்டியல் அனுப்பப்படவுள்ளது. கல்வியியலில் பி.எட். பட்டப்படிப்புடன் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் அறிவியல்(அல்லது) பி.எஸ்.சி. இன்பர்மேசன் டெக்னாலஜி அல்லது பேச்சிலர் ஆப் கணினி அப்ளிகேசன் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கான இனவாரியான பதிவு மூப்பு பின்னர் அறிவிக்கப்படும். தற்போது இக்கல்வித் தகுதியை பதிவு செய்துள்ள அனைவரும் தங்களது பதிவை சரிபார்த்துக் கொள்ள ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு அனைத்து சான்றிதழ்கள், குடும்ப அட்டை ஆகியனவற்றுடன் 31 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வந்து பரிந்துரை விவரத்தினை அறிந்து கொள்ளலாம் என்று அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai