சுடச்சுட

  

  கீழக்கரை நகர்மன்றக் கூட்டத்தில் அதிகாரிகள் சிறைபிடிப்பு

  By dn  |   Published on : 31st October 2014 11:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கீழக்கரையில் வியாழக்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் அதிகாரிகளை கவுன்சிலர்கள் சிறை பிடித்தனர்.

  கீழக்கரை நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கும், நகர்மன்றத் தலைவருக்கும் இணக்கமில்லாத சூழ்நிலையால்  கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

  காலை 11.30 மணிக்கு தொடங்கிய இக் கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் ராவியத்துல் கதரியா தலைமை வகித்தார். ஆணையர் (பொறுப்பு) சிராஜூதீன், நகர்மன்றத் துணைத் தலைவர் ஹாஜாமுகைதீன், தலைமை எழுத்தர் நாகநாதன், பொறியாளர் அறிவழகன், சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

   கூட்டம் தொடங்கிய அரை மணி நேரத்தில், 14 கவுன்சிலர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

  இந்த நிலையில், நகர்மன்றத் தலைவர்  தீர்மானங்களை வாசித்துவிட்டு இருக்கையில் இருந்து எழுந்து சென்றுவிட்டார்.

  இதனால் ஆவேசமடைந்த கவுன்சிலர்கள், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளைச் சிறை பிடித்து உள்ளேயே கூட்ட அரங்கிலேயே கதவுகளை அடைத்துக் கொண்டு இருந்தனர்.

  தகவலறிந்த போலீஸôர் சம்பவ இடத்துக்குச் சென்று கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளை மீட்டனர்.

  இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் ராவியத்துல் கதரியா கூறுகையில்,

  1,5,8,9,12,13,14,21 ஆகிய வார்டுகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், கூட்டத்தில் இருந்து அவர்களை வெளியேறுமாறு கூறினேன். மற்றபடி அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai