Enable Javscript for better performance
பரமக்குடியில் தேவர் குரு பூஜை விழா- Dinamani

சுடச்சுட

    

    பரமக்குடியில் தேவர் குரு பூஜை விழா

    By dn  |   Published on : 31st October 2014 11:46 AM  |   அ+அ அ-   |    |  

    பரமக்குடி பகுதியில் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவரின் 107-ஆவது ஜயந்தி விழா மற்றும் 52-ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை அவரது திருஉருவப் படத்துக்கு மாலை அணிவித்தும், பொங்கல் வைத்தும் வெகுசிறப்பாக கொண்டாடினர்.

     பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்.28,29 மற்றும் 30-ஆம் தேதிகளில் அவரது நினைவிடத்தில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவினைத் தொடர்ந்து பரமக்குடியில் பேருந்து நிலையத்தில் பழக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பூச்செண்டு, செயலர் திருக்கம்மாள், இணைச்செயலர் அமுதா ஆகியோர் முன்னிலையில் பொங்கல் வைத்தும், உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் கொண்டாடினர். இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

     அதனைத் தொடர்ந்து கிழக்குப் பகுதி தேவர் பேரவை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வைகை நகர் பகுதியில் முக்குலத்தோர் நலச்சங்கம் சார்பில் குருபூஜை விழா கொண்டாடப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai