Enable Javscript for better performance
அலுவலக உதவியாளர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை- Dinamani

சுடச்சுட

    

    அலுவலக உதவியாளர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை

    By ராமநாதபுரம்  |   Published on : 17th April 2015 02:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அலுவலக உதவியாளர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரைக்கப்பட இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செய்திக்குறிப்பு விவரம்:

    மதுரை கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் கேட்டுக் கொண்டபடி அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்திருக்க வேண்டும். கடந்த 1.1.2015ன்படி ஆதிதிராவிட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் வயது 18 முதல் 35.பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வகுப்பினர் வயது 18 முதல் 32. பொதுப் போட்டியாளர் வயது 18 முதல் 30 வரையும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பில் தளர்வு இல்லை.

      உத்தேச பதிவு மூப்பு அடிப்படையில் பொதுப் போட்டியாளர்களில் முன்னுரிமையற்றவர்களாக இருந்தால் 10.6.1991 வரையும், பொதுப் போட்டியாளர்களில் மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் 7.6.1988 வரையும், ஆதிதிராவிடர் வகுப்பினரில் அருந்ததியினர்களில் ஆதரவற்ற விதவைகள் அனைவரும் பரிந்துரைக்கப்படவுள்ளனர்.

     இத்தகுதிகளையுடைய பதிவுதாரர்கள் அலுவலக உதவியாளர் பணிக்கு பரிந்துரைக்கப்பட இருப்பதால் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் அனைத்து சான்றிதழ்களோடும் ஏப்ரல் 20 ஆம் தேதி வந்து பரிந்துரை விவரத்தினை கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai