Enable Javscript for better performance
உலக அமைதிக்காக மாட்டுவண்டியில் புனிதப் பயணம் மேற்கொண்ட சாது- Dinamani

சுடச்சுட

    

    உலக அமைதிக்காக மாட்டுவண்டியில் புனிதப் பயணம் மேற்கொண்ட சாது

    By ராமேசுவரம்  |   Published on : 17th April 2015 02:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உலக அமைதிக்காக 15 ஆயிரம் கிமீ மாட்டு வண்டியில் புனிதப் பயணம் மேற்கொண்ட கேரள மாநிலத்தை சேர்ந்த சாது துளசி கிருஷ்ணா(39) கங்கை தீர்த்தத்துடன் ராமேசுவரம் பகுதிக்கு திங்கள்கிழமை வந்தார்.

    அவர், செவ்வாய்க்கிழமை ராமேசுவரம் அக்னித் தீர்த்தக்கடல் மற்றும் புனித தீரத்தங்களில் நீராடி சுவாமி சன்னதியில் கங்கை நீரால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினார். இந்தப் புனிதப் பயணம் குறித்து அவர் கூறியது: இந்தப் புனிதப் பயணத்தை  2012-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் தேதி கன்னியாகுமரி பகுதியிலிருந்து       தொடங்கினேன்.  கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத், உத்திரகாண்ட், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 19 மாநிலங்களில் புனிதப்பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொண்டேன். இப்பகுதிகளில் ஜோதிலிங்கம் அமைந்துள்ள 11 திருத்தலங்களுக்குச் சென்று புனித நீரால் அபிஷேகம் செய்தேன். இந்த வகையில் 15 ஆயிரம் கி.மீ தொலைவை மாட்டுவண்டியில் பயணித்தேன். பன்னிரெண்டாவது ஜோதிலிங்கம் அமைந்துள்ள ராமேசுவரத்தில் கங்கை நீரால் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து புனிதப் பயணத்தை நிறைவு செய்துள்ளேன், என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai