Enable Javscript for better performance
ஏப்ரல் 18 கமுதி பகுதிகளில் மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    கமுதி, முதுகுளத்தூர், பார்த்திபனூர் பகுதிகளில் சனிக்கிழமை (ஏப்.18) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

      இது குறித்து கமுதி உதவிக் கோட்ட மின் வாரிய உதவி செயற்பொறியாளர் கோ.கதிர்வேல் கூறியிருப்பதாவது:

      கமுதி- கோட்டைமேட்டில் உள்ள உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெறுவதையொட்டி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.

      எனவே கமுதி, முதுகுளத்தூர், செங்கப்படை, கீழ ராமநதி, மண்டலமாணிக்கம், அபிராமம், பார்த்திபனூர் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் மின் சப்ளை இராது என்று தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai