Enable Javscript for better performance
கமுதி பகுதிகளில் மழை: கோடை உழவு தீவிரம்- Dinamani

சுடச்சுட

    

    கமுதி பகுதிகளில் பெய்த மழை காரணமாக, கோடை உழவில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

      கமுதி பகுதியில் கடந்த 2 நாள்களாக ஓரளவு நல்ல மழை பெய்துள்ளது. இதையடுத்து விவசாயிகள் கோடை உழவில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த மழை நீடித்தால், கோடை விவசாயம் செய்ய வாய்ப்பாக இருக்கும் என்றும் அறுவடைக்கு தயாராக உள்ள மிளகாய், பருத்தி செடிகளுக்கு நல்ல பயன் அளிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai