Enable Javscript for better performance
கல்லூரிப் பேருந்து மீது கார் மோதல்: ஒருவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கல்லூரிப் பேருந்து மீது கார் மோதல்: ஒருவர் சாவு

    By ராமநாதபுரம்  |   Published on : 17th April 2015 02:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் அருகே லாந்தை கிராமத்தில் வியாழக்கிழமை தனியார் கல்லூரிப் பேருந்து மீது கார் மோதியதில் கார் ஓட்டுநர் உயிரிழந்தார்.

     ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பெருநாழி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் சுந்தரசாமி மகன் மதிவாணன் (56). இவரும் பெருநாழி காவல்நிலைய தலைமைக் காவலரான பிந்துகுமாரி(45)யும் காரில் ராமநாதபுரத்திலிருந்து பெருநாழிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை கமுதி மேட்டுத்தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சுரேஷ் (26) ஓட்டி வந்தார்.

      மதுரை- மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் ராமநாதபுரம் அருகே லாந்தை கிராமப் பகுதியில் கார் சென்ற போது எதிரே வந்த தனியார் பொறியியல் கல்லூரிப் பேருந்து மீது மோதியது. இதில் கார் ஓட்டுநர் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் பயணம் செய்த மதிவாணனும், பிந்துகுமாரியும் பலத்த காயம் அடைந்து ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடம் தேசிய நெடுஞ்சாலையாக இருந்ததால் ஒரு மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ராமநாதபுரம் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து தனியார் பேருந்து ஓட்டுநர் முருகேசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai