Enable Javscript for better performance
காவல் துறையில் ஒரே நாளில் 260 பேர் விருப்ப பணியிட மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    காவல் துறையில் ஒரே நாளில் 260 பேர் விருப்ப பணியிட மாற்றம்

    By ராமநாதபுரம்  |   Published on : 17th April 2015 02:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டக் காவல் துறையில் ஒரே நாளில் 260 பேரை விருப்ப பணியிட மாற்றம் செய்து எஸ்.பி.மயில்வாகனன் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

     ராமநாதபுரம் மாவட்டக் காவல் துறையில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிபவர்கள் தாங்கள் விரும்பிய காவல் நிலையங்களில் பணியில் சேர்ந்து கொள்ளலாம் என ராமநாதபுரம் எஸ்.பி.மயில்வாகனன் உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து எஸ்.பி. அலுவலகத்தில் விருப்பப் பணியிட மாற்றம் தேவைப்படுவோருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. ஏடி.எஸ்.பி. இன்பராஜ்,எஸ்.பி. அலுவலக கண்காணிப்பாளர் சுவாமிதாஸ் பாக்கியசிங், தனிப்பிரிவு ஆய்வாளர் வெள்ளையப்பன் தலைமையில் கலந்தாய்வு நடந்தது.

     இதில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றிய 104 பேர், ஒரு ஆண்டு பணியாற்றிய 98 பேர், நிர்வாகப் பிரிவைச் சேர்ந்த 23 பேர், ஆயுதப் படைப் பிரிவைச் சேர்ந்த 35 பேர் என மொத்தம் 260 பேர் விரும்பிய இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai