Enable Javscript for better performance
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் விடிய விடிய மழை- Dinamani

சுடச்சுட

    

    சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் விடிய விடிய மழை

    By ராமநாதபுரம்  |   Published on : 17th April 2015 02:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் புதன்கிழமை இரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் அவை சேதமடைந்து காணப்படுகின்றன.

       ராமநாதபுரத்தில் புதன்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.வியாழக்கிழமை அதிகாலையிலும் இது தொடர்ந்தது. நகரில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர். ராமநாதபுரம் நகரின் பிரதானச் சாலைகளான சாலைத் தெரு, சிகில்ராஜவீதி எனப்படும் சுவாமி விவேகானந்தர் சாலை ஆகிய பகுதிகளில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

     ராமநாதபுரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை வரை பெய்த மழையளவு (மி.மீட்டரில்) முதுகுளத்தூர்- 43.20, பாம்பன்- 26.40, பரமக்குடி- 45.60, ராமநாதபுரம்- 12.40, திருவாடானை- 18.60, தொண்டி- 10.10, பள்ளமோர்குளம்- 12, மண்டபம்- 38, ராமேசுவரம்- 25.20, தங்கச்சிமடம்- 30, வட்டாணம்-16, தீர்த்தாண்டதானம்- 36, ஆர்.எஸ்.மங்கலம்- 82, கடலாடி- 60.60, வாலிநோக்கம்- 18.60. மொத்த மழையளவு- 514.70. சராசரி மழையளவு- 32.17.

    கமுதி: கமுதி பகுதியிலும் புதன்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய தொடர்ந்து மழை பெய்தது. மழையின் அளவு 40 மி.மீ. பதிவாகி இருந்தது. ஏற்கனவே 3 நாள்களுக்கு முன்பு 68 மி.மீ. அளவு மழை பெய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் கோடை மழையை விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மணலூர், பழையனூர் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை இரவு நல்ல மழை பெய்தது. 

        திருப்புவனத்தில் லேசான மழை பெய்து வந்த நிலையில் புதன்கிழமை நள்ளிரவு தொடங்கிய மழை காலை வரை இடைவிடாது பெய்தது. இதனால் பூமி குளிர்ந்தது.

     திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மணலூர், பழையனூர் உள்ளிட்ட கிராமங்களில் கால்நடைகளுக்கு தேவையான புற்கள் துளிர்விடும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai