Enable Javscript for better performance
நஷ்டஈடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி- Dinamani

சுடச்சுட

    

    நஷ்டஈடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

    By ராமநாதபுரம்  |   Published on : 17th April 2015 02:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய  ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து வியாழக்கிழமை நீதிமன்ற ஊழியர்கள் அதை ஜப்தி செய்தனர்.

      பரமக்குடி அருகே உள்ள காட்டுப்பரமக்குடியில் வசித்து வருபவர் பாலாமணி. இவரது கணவர் கோவிந்தன் (50). கோழி இறைச்சிக் கடையில் பணியாற்றி வந்த இவர், கடந்த 14.4.1997 அன்று தனது வீட்டிலிருந்து அருகில் இருந்த கோழிக்கடைக்கு சைக்கிளில் சென்ற போது அவ்வழியாக மதுரையிலிருந்து ராமேசுவரம் நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தார்.

     இந்நிலையில் ரூ.2 லட்சம் இழப்பீடு கேட்டு கோவிந்தனின் மனைவி பாலாமணி ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜாசொக்கலிங்கம் ரூ.1.90 லட்சம் இழப்பீடு வழங்குமாறு கும்பகோணம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு கடந்த 2002 ஆம் ஆண்டு உத்தரவிட்டார். அதன் படி முழுத் தொகையையும் வழங்காமல், ரூ.88,695 நிலுவைத் தொகையை அரசுப் போக்குவரத்துக் கழகம் செலுத்தாததால் மனுதாரர் சார்பில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக் கோரும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி தமிழரசு உத்தரவிட்டார்.

      இதன் பேரில் நீதிமன்ற ஊழியர்கள், ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்த தஞ்சாவூர் செல்லும் அரசுப் பேருந்தை ஜப்தி செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai