Enable Javscript for better performance
பாம்பன் கடலோரப் பகுதியில் இலங்கைப் படகு- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு கடலோரப் பகுதியில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த இலங்கை படகை ராமேசுவரம் கியூ பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

     பாம்பன் தெற்கு கடலோரப் பகுதியான கன்னுப்பாடு கடற்கரைப் பகுதியில் கேட்பாரற்று இலங்கைப் படகு நிறுத்தப்பட்டிருப்பதாக ராமேசுவரம் கியூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து கியூ பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கென்னடி தலைமையிலான போலீஸார் வியாழக்கிழமை அதிகாலையில் அங்கு சென்று அந்த படகை கைப்பற்றி சோதனையிட்டனர்.  அப்போது படகில் 3 கேன்களில் டீசல், படகை இயக்குவதற்கான சாதனங்கள், நங்கூரம் மற்றும் ஒரு பையில் உடைகள் ஆகியவை இருந்தன. இந்த படகு இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்தது என தெரியவந்துள்ளது. பின்னர் படகிலிருந்த பொருள்கள் அனைத்தையும் போலீஸார் கைப்பற்றினர். கடந்த சில மாதங்களாகவே ராமேசுவரம், பாம்பன் கடலோரப் பகுதிகளிலிருந்து இலங்கைக்கு பொருள்கள் கடத்தும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே இந்த படகில் வந்தது இலங்கையைச் சேர்ந்த கடத்தல்காரர்களா அல்லது தீவிரவாதிகளா என கியூ பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai