Enable Javscript for better performance
பாம்பன் ரயில் பாலத்தில் பொறியாளர்கள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    பாம்பன் ரயில் பாலத்தில் பொறியாளர்கள் ஆய்வு

    By ராமேசுவரம்  |   Published on : 17th April 2015 02:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாம்பன் ரயில் பாலத்தில் தனியார் நிறுவன பொறியாளர்கள் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினர்.

      பாம்பன் ரயில் பாலத்தில் சென்னை பகுதி எல் அண்ட் டி தனியார் நிறுவன கட்டடப் பிரிவைச் சேர்ந்த துணைத் தலைமை பொறியாளர் ராபர்ட் ராஜசேகர் தலைமையில் 20 பொறியாளர்கள் கொண்ட குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர். இதில் பொறியாளர்கள் 2 பிரிவுகளாக சென்று, பாலத்தில் உள்ள தூண்கள், இரும்பு கர்டர்கள், தூக்குப் பாலம் மற்றும் மேல் பகுதிகள் ஆகியவற்றை பார்வையிட்டு அதன் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் பாலத்தின் மையப் பகுதியிலுள்ள அலுவலகத்தையும், பாம்பன் ரயில் நிலையத்தில் பாலம் குறித்த புகைப்படங்கள், பணிகள் நடைபெற்ற ஆவணங்கள் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

      இது குறித்து அந்நிறுவனத்தின் துணைத் தலைமை பொறியாளர் ராபர்ட்ராஜசேகர் கூறியதாவது: எங்கள் நிறுவனத்தில் கட்டடப் பிரிவில் பணியாற்றும் பொறியாளர்களுக்கு பழமையான கட்டடங்கள், கோயில்கள், அரண்மனைகள், கடல் மற்றும் ஆறுகளின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பாலங்கள் குறித்து ஆய்வு செய்து பயிற்சி அளித்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக பாம்பன் ரயில் பாலம், அதில் அமைக்கப்பட்டுள்ள தூக்குப் பாலம் ஆகியவை பற்றி பொறியாளர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. ரயில் பாலம் திறனாகவும், வலுவாகவும் உள்ளது என அவர் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai