Enable Javscript for better performance
ராமநாதபுரத்தில் வி.ஹெச்.பி. ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி ராமநாதபுரம் பாரதிநகரில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பும், கிராமக் கோயில் பூசாரிகள் பேரவையும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தின.

     இதை கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை நிர்வாக அறங்காவலரும், விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் நிறுவனருமான ஸ்ரீவேதாந்தம் தொடங்கி வைத்துப் பேசியதாவது: மதுக் கடைகளால் இளைஞர் சமுதாயம் சீரழிகிறது. விரைவில் ஒரு லட்சம் பெண்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். மது போதையால் பல இளைஞர்கள் விபத்துக்குள்ளாகி பெண்கள் ஏராளமானோர் விதவைகளாகி விட்டனர்.

      தேர்தலில் போட்டியிடும் எந்தக் கட்சியும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் மட்டுமே வாக்களிப்போம் என உறுதியேற்க வேண்டும் என்று பேசினார்.

     ஆர்ப்பாட்டத்துக்கு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில அமைப்பாளர் எஸ்.ராஜா,மாநில இளைஞரணி அமைப்பாளர் எஸ்.சோமசுந்தரம்,மாவட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கிராமக் கோயில் பூசாரிகள் பேரவையின் மண்டல அமைப்பாளர் கோதாவரி வரவேற்றுப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பூசாரிகள் பேரவையின் மாவட்ட அமைப்பாளர் அன்புமாறன், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் துரை.கண்ணன், பூக்கட்டுவோர் பேரவை மாநில அமைப்பாளர் துரை.ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai