Enable Javscript for better performance
ராமநாதபுரத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பேரணி

    By ராமநாதபுரம்  |   Published on : 17th April 2015 02:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் ரயில் நிலையத்திலிருந்து ஹெல்மெட் விழிப்புணர்வுப் பேரணியை டி.எஸ்.பி. அண்ணாமலை ஆழ்வார் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

      ராமநாதபுரம் நேஷனல் அகாதெமி மெட்ரிக். பள்ளியின் சார்பில் நடத்தப்பட்ட இப்பேரணிக்கு ரோட்டரி சங்க ஆளுநர் தேர்வு டாக்டர். சின்னத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். நேஷனல் மெட்ரிக். பள்ளி முதல்வர் ராஜம்முத்து, நேஷனல் ஐ.சி.எஸ்.இ. பள்ளி முதல்வர் ஜெயலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் நிர்வாக அலுவலர் சங்கரலிங்கம் வரவேற்றார்.

     ஹெல்மெட் விழிப்புணர்வுப் பேரணியை டி.எஸ்.பி.அண்ணாமலை ஆழ்வார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரயில் நிலையத்திலிருந்து தொடங்கிய இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து பாரதிநகர் பகுதியில் நிறைவடைந்தது. பேரணியில் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கச் செயலர் ஆத்ம.கார்த்திக், இணைச் செயலர் முரளி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai