Enable Javscript for better performance
ராமேசுவரம் பத்திரகாளியம்மன் கோயிலில் அதிமுகவினர் சிறப்பு யாக பூஜை- Dinamani

சுடச்சுட

    

    ராமேசுவரம் பத்திரகாளியம்மன் கோயிலில் அதிமுகவினர் சிறப்பு யாக பூஜை

    By ராமேசுவரம்  |   Published on : 17th April 2015 02:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம் பத்திரகாளியம்மன் கோயிலில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுதலையாக வேண்டி அக்கட்சியினர் சிறப்பு யாக பூஜைகளை வியாழக்கிழமை நடத்தினர்.

     இந்த பூஜைக்கு நகர் செயலர் பெருமாள் தலைமையும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுந்தரராஜ் முன்னிலையும் வகித்தனர். பூஜையில் கலசத்தில் புனித தீர்த்தம் நிரப்பப்பட்டு மந்திரங்கள் ஓதப்பட்டன. பின்னர் அந்த புனித நீரால் அம்மனுக்கு அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும், தீபாராதனை வழிபாடுகளும் நடைபெற்றன. இதில் விழுப்புரம் எம்.பி. காமராஜ், எம்.எல்.ஏ. குமரகுரு, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அழகுவேல் பாபு மற்றும் ராமேசுவரம் நகர் மன்றத் தலைவர் அர்ச்சுனன், கோயில் அண்ணா தொழிற்சங்கத் தலைவர் அண்ணாதுரை, மின் பிரிவு கோட்ட செயலர் முருகேசன் மற்றும் ஜெ. பேரவைச் செயலர் கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai