Enable Javscript for better performance
அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டு வண்டிகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டு வண்டிகள் பறிமுதல்

    By கமுதி,  |   Published on : 27th January 2015 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கமுதி அருகே ஆற்று மணல் கடத்தலில் 3 மாட்டு வண்டிகளை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து 3 பேரை கைது செயதனர்.

    மண்டல மாணிக்கம் பகுதி குண்டாறில் அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க கமுதி உதவி காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் ராஜன் சஞ்சய் மேற்பார்வையில், ஆய்வளர் முருகன், மண்டல மாணிக்கம் சார்பு ஆய்வாளர்கள் திருவேட்டை, கருப்பையா, முனியசாமி ஆகியோர் ரோந்து சுற்றி வந்து கண்காணித்தனர். அப்போது சேதுராஜபுரத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (54), ராஜூ (25), முருகன் (35) ஆகியோர் ஆற்று மணலை, மாட்டு வண்டிகளில் ஏற்றிச் சென்றதை தடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர். 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai