Enable Javscript for better performance
கோட்டூர் முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    கோட்டூர் முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

    By தேவகோட்டை  |   Published on : 27th January 2015 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா கோட்டூரில் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சனிக்கிழமை காலையில் அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை மற்றும் மகா கணபதி ஹோமமும், மாலையில் திரவியாகுதி, மஹா பூர்ணாகுதி ஆகியவையும் நடைபெற்றன. பின்னர் அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாம் கால வேள்வி பூஜை ஆரம்பமானது. மாலை மூன்றாம் கால வேள்வி பூஜை நடைபெற்றது. திங்கள்கிழமை காலையில் நான்காம் கால வேள்வி பூஜை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மண்டப சாந்தி, நாடி சந்தானம், கோ பூஜை ஆகியவை நடைபெற்றன.

    பின்னர் மஹா பூர்ணாகுதி, தீபாராதனை காட்டப்பட்டு கடம் புறப்பாடு நடைபெற்று மேளதாளங்கள் முழங்க கோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai