Enable Javscript for better performance
பரமக்குடியில் மீன்கடைகளுக்கு தீ வைப்பு: போலீஸார் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    பரமக்குடியில் மீன்கடைகளுக்கு தீ வைப்பு: போலீஸார் விசாரணை

    By பரமக்குடி  |   Published on : 27th January 2015 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமக்குடி உழவர் சந்தைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தீப்பற்றியதில் புதிதாகப் போடப்பட்டிருந்த 12 மீன் கடை குடிசைகள் எரிந்து சாம்பலாயின.

    பரமக்குடி உழவர் சந்தைப் பகுதியில் கைக்கோலார் ஊரணி மீன் வியாபாரிகள் சாலையோரங்களில் மீன் வியாபாரம் செய்து வந்தனர். போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால் மீன் வியாபாரிகளின் சங்கத் தலைவர் கே. நாகராஜன், செயலர் செய்யது இபுராஹிம், பொருளாளர் ஆர். சுரேஷ் ஆகியோர் உள்ளிட்ட 12 மீன் வியாபாரிகள் கடந்த ஜனவரி 15ஆம் தேதி நகராட்சி ஆணையரின் உத்தரவு பெற்று அந்த பகுதியில் தென்னங்கீற்றால் கொட்டகை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.

    இந்த கொட்டகை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது.

    தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். தீயில் கருகிய கொட்டகை மற்றும் அங்கிருந்த பொருள்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.

    இதுகுறித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் அச்சங்கத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai